தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அண்மைக் காலமாக தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அடுத்தடுத்து சிறந்த இளம் இயக்குனருடன் கைகோர்த்து தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
சினிமா உலகில் நல்லது கெட்டது என பல விஷயங்களை பார்த்து தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நேர்மறையாக ஓடிக் கொண்டிருக்கிறார் இதனால் அஜித்தை பலருக்கும் பிடித்துப் போய் உள்ளது குறிப்பாக சினிமா ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களுக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும்
அவரைப் பற்றிய செய்திகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அன்மையில் கேஎஸ் ரவிக்குமார் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி அண்மையில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் சொன்னது : என்னுடைய திருமண பத்திரிக்கை அழைப்பிதழை கொடுக்க அஜித் வீட்டிற்கு சென்றிருந்தேன் அதுவரை நான் அஜித்தை பார்த்ததே கிடையாது அந்த சமயம் என்னுடைய டிமான்டி காலனி படம் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை அஜித்தும் பார்த்திருப்பார் போல நாங்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே அஜித் எங்களைப் பார்த்து முதலில் உங்களுடைய டிமான்டி காலனி படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி தான் பேச்சை ஆரம்பித்தார்.
பின் பேசிக்கொண்டிருக்கையில் வீட்டு வேலையாள் ஜூஸ் கொண்டு வந்திருந்தார் அவர் கொண்டு வந்த ஜூஸ் அஜித் வாங்கி அவர் கையாலேயே எல்லோருக்கும் பரிமாறினாள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து போனேன் அப்போது தான் புரிந்து கொண்டேன் ஏன் எல்லோருக்கும் அஜித்தை மிகவும் பிடித்துப் போகிறது என்று அப்போது தோன்றியது ஒருவர் ஒரு விஷயத்தில் இருந்து விலக விலக தான் மிகவும் ஈர்க்கப்படுவார். அதனால் தான் எல்லோருக்கும் அஜித்தைப் பிடிக்கிறது என தன்னுடைய அனுபவத்தை பகர்ந்தார் நடிகர் அருள்நிதி.