ஜித்தன் ரமேஷ் கடந்து வந்த அவமானம்!! இத விட பெரிய அவமானம் பெருசா இருக்க முடியாது.

0

jithan ramesh insulted by public: விஜய் டிவியில் போட்டியாளர்கள் தொடர்ந்து தங்களின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் தன் வாழ்நாளில் நடந்த கஷ்டங்களை அவர் பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் பேசும்போது நான் பிறக்கும்போதே சில்வர் ஸ்பூன் எல்லாம் கிடையாது சாதாரண கூட்டு குடும்பத்தில் தான் பிறந்தேன் பின்பு படிப்படியாகத் தான் இந்த இடத்திற்கு வந்தோம்.

நான் நடித்த முதல் படம் மெகா ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தொடர்ந்து ப்ளாப் ஆகி கொண்டு இருந்தது. வெளியே போனால் ஜித்தன் ரமேஷ் என ரசிகர்கள் கூறும்போது கேட்க நன்றாக இருந்தது. அதுவே கொஞ்ச நாள் கழித்து எந்த திரைப்படமும் ஓடாததால் நடிகர் ஜீவா ஓட அண்ணனா, தம்பியா ஆர்பி சவுத்ரி சாரோட பையனா என கேட்க ஆரம்பித்தனர்.

படம் நடிக்கல ஃபேமஸா இல்லை என்கின்ற ஒரே காரணத்தால் வெளியுலகில் என் மரியாதை குறைந்து கொண்டே போனது. படத்துல நடிச்சுட்டு இருக்கணும் இல்லைனா வெளிய போனா சேர் போடமாட்டாங்க, பொக்கே கொடுக்க மாட்டாங்க, அப்படி கொடுத்தால் வேற யாராவது வந்துட்டா அதையும் கையிலிருந்து பிடுங்கிக்கிவாங்க.

இதுபோலப் பல கஷ்டங்களை தாண்டி தான் நான் பதினைந்து வருஷம் கழுச்சி இந்த மேடைக்கு வந்து இருக்கேன். இந்த மேடையயை நான் இப்போது சரியாக பயன்படுத்திக் கொள்ளபோகிறேன் எனவும் கூறினார்.

மேலும் தனது மனைவியிடம் பேமஸ்சா இல்லனா யாரும் மதிக்க மாட்டாங்கா என்று சொல்லி எத்தனையோ நாள் அவள் மடியில் படுத்து அழுது உள்ளேன் எனவும் கூறினார்.