ஜியோவின் அடுத்த அதிரடி.! இப்படி ஒரு ஆஃபர யாரும் நெனச்சு கூட பார்த்திருக்க மாட்டிங்க

0
reliance-jio
reliance-jio

கடந்த சில வருடங்களாக ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது இதனால் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன, ஜியோவின் இந்த அசுர வளர்ச்சிக்கு எந்த நிறுவனங்களும் ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்தநிலையில் ஜியோ அடுத்ததாக புதிய ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ஆம் ஜியோ ஜிகா பைபர் என்ற இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சேவைக்கான முன்பதிவு கடந்த வருடமே தொடங்கியது, அதேபோல் இந்த சேவை நகர்ப்புறங்களில் மட்டுமே கொண்டுவருமென அறிவித்திருந்தார்கள் ஆனால் வாடிக்கையாளர்களின் தேவையைப் பொருத்து அனைத்து இடங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறுகிறார்கள்.

இந்த ஜியோ பைபர் வசதி மூலம் landline, தொலைக்காட்சி, இன்டர்நெட், என அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம், இந்த வசதியை பெற முன்பணமாக 4500 கட்ட வேண்டும், அப்படி கட்டினால் ஆறு மாதத்திற்கு இலவச சேவையை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆறு மாத காலம் முடிந்த பிறகு, மாதம் ரூபாய் 600 செலுத்தி இந்த சேவையை நீட்டிக் கொள்ளலாம்.

மேலும் இந்த சேவையில் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் 600 க்கும் மேல் உள்ள சேனல்களை கண்டு களிக்கலாம், அதுமட்டுமில்லாமல் ரூபாய் 1000 அதிகமாக செலுத்தினால் உங்கள் வீட்டில் இருக்கும் லேப்டாப் மொபைல் என 40 கேட்ஜட்களை இணைத்துக் கொள்ளலாம்.

இப்படி அடுத்தடுத்த ஆஃபர்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டு வருவதால், டாட்டா ஸ்கை, டிடிஎச்,சன் நிறுவனம் முதல் ஏர்டெல், வோடபோன், என அனைத்து நிறுவனங்களும் ஈடு கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.