சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? வெளிவந்த மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் காதல் நிறைந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் முக்கியமாக ஒரு சில இயக்குனர்கள் அந்த படத்தில் உணர்வுபூர்வமான காதல் காட்சிகளை இடம்பெற வைத்து ரசிகர்களின் மனதை வெகுவாக ஈர்த்து இருப்பார்கள்  அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் தத்துரூபமாக இருந்ததோடு கதை, பாடல்கள் மற்றும் சூர்யா, பூமிகா, ஜோதிகா என அனைத்தும் சரியாக அமைந்ததால் இத்திரைப்படம் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் செமசாக இருந்து. அதுவும் முக்கியமாக இத்திரைப்படத்தின் பாட்டு சொல்லவே தேவையில்லை தற்பொழுது வரையிலும் ஹிட்டாக இருந்து வருகிறது.

திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை அந்த வகையில் ஹிட் பெற்ற திரைப்படங்களில் லிஸ்டில் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படமும் இடம்பெற்று உள்ளது. இத்திரைப்படத்தில் கல்லூரி காலகட்டத்தில் சூர்யாவின் காதலிக்காக பூமிகா நடித்திருப்பார். இவர்கள் நடித்திருந்த காட்சிகளும் நல்ல வரவேற்ப்பை பெற்று பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

இவரை தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாக ஜோதிகா நடித்திருப்பார் இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையும் இருக்கும் இப்படிப்பட்ட நிலை இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இத்திரைப்படத்தில் முதலில் நடிகை பூமிகாவிற்கு பதிலாக நடிகை அசின் நடிகை இருந்துள்ளார். ஆனால் அசின் கதை சரியில்லை என்று வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனை வரைந்த அசினின் ரசிகர்கள் அசின் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று கூறி வருகிறார்கள். பூமிகாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இருந்தாலும் அசின் நடித்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சூப்பராக இருந்திருக்கும்.

Leave a Comment