ஜெயம் ரவியின் தாஸ் பட நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?புகைப்படம் உள்ளே.!

Renuka menon new look photos: தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரேணுகா. இவர் இதற்கு முன்பு மலையாள திரைப்படமான பதாக என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் மலையாள படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து அவர் தாஸ்,பிப்ரவரி 14 போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். பிறகு இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாபக்காதலன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வெகுளிதனமாக நடித்து மக்கள் மனதில் இன்றளவும் இவரது நடிப்பு பேசப்பட்டு வரும் நபராக மாறியுள்ளார் ரேணுகா. அந்த அளவுக்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் இவர் 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கலிபோர்னியாவில் தற்போது செட்டில் ஆகியுள்ளார். சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு குடும்பத்திற்காக தற்போது கலிபோர்னியாவில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

actress-renuka-menon
actress-renuka-menon

Leave a Comment