ஆல்யா மானசா பாடலுக்கு செம்ம கியூட்டாக நடனமாடிய பாக்யலக்ஷ்மி சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ

ரீல் ஜோடியாக அறிமுகமான பல ஜோடிகள் தற்போது திருமணம் செய்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்கள்.அந்த வகையில் தற்போது வெள்ளித்திரையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்களோ அதே போல் சின்னத்திரையிலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஜோடிகள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

இவர்கள் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு புதிதாக அறிமுகமானார்கள். அதோடு இந்த சீரியலில் இவர்களுகிட்டையே கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதன் பிறகு இவர்களுடையே காதல் மலர்ந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்தின் பொழுது ஆலியா மனசாவின் பெற்றோருக்கு சம்மதம் இல்லாததால் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் முடிவடைந்தது.அதன்பிறகு பிரபல ஹோட்டலில் கோலாகலமாக வரவேற்ப்பை வைத்திருந்தார்கள்.

அதன் பிறகு சில மாதங்கள் கழித்து ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் நடிக்காமல் இருந்தவர் சஞ்சீவி மற்றும் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். தற்பொழுது தான் ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் ஒரு வயதாகும் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள்.அதில் காத்தாடி என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் தற்போது அந்த பாடலுக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற  கேரக்டரில் நடித்து வரும் ஜெனிபர் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version