தர லோக்கலாக களமிறங்கிய ஜீவி பிரகாஷ் வைரல் ஆகுது ஜெயில் திரைப்படத்தின் டீஸர்.!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பிரபலம் அடைந்தவர். இவர் முதன்முதலில் இசையமைப்பாளராக தான் சினிமாவில் பணியாற்றி வந்தார் அதன்பிறகு  நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தற்போது நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெயில் அங்காடித்தெரு ஆகிய திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது ஜிவி பிரகாஷ் ஜெயில் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்களுடன் இனைந்து அபர்ணதி, ராதிகா சரத்குமார், பசங்க பாண்டி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் ஜெயில் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்  இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் ஜெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் தர லோக்கலாக இறங்கி நடித்துள்ளார் அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்ப்பு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இருக்கிறார்.

இதோ ஜெயில் திரைப்படத்தின் டீசர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment