அட இவரு முதல்வர் தானா.! மக்கள் ஆச்சரியம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு செம்ம குஷியான செய்தி ஜெகன்மோகன்

0
jagan-mohan-reddy
jagan-mohan-reddy

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பதவியேற்றதிலிருந்து ஆந்திர மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், இவர் பதவி ஏற்றதில் இருந்து கல்வித்துறை, மருத்துவத்துறை விவசாயம் என அடுத்தடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம், அதைப்போல் மாவட்ட ஆட்சியர் வாரத்திற்கு ஒரு நாள் பள்ளிகளிலும் மருத்துவமனையிலும் தங்கி அங்குள்ள குறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் பூரண மதுவிலக்கு அமுல் படுத்தி வருகிறார், அடுத்ததாக முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார், இப்படி அடுத்தடுத்து பல நன்மைகளை மக்களுக்கு செய்து வரும் ஜெகன் தினக்கூலி களாக வேலை செய்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு சந்தோஷமான அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆட்டோ விற்கான fc இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் இந்த புதிய திட்டத்தால் ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் அதிகரிக்கும் அவர்களின் தொழிலில் முன்னேற்றம் அடையும்.

இதுபோல் தமிழ்நாட்டில் நடந்தால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என சமூகவளைதலத்தில் மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.