ஜெகன் மோகனின் அடுத்த ஆப்பு தனியார் நிறுவனத்திற்கு தான்.! இதோ அதிரடி அறிவிப்பு

0
Y-S-Jaganmohan-Reddy
Y-S-Jaganmohan-Reddy

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மக்களுக்கு மக்களாட்சியை கொடுத்து வருகிறார், இவர் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது, அந்த வகையில் அடுத்ததாக புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தினார், அதாவது ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு தான், அதேபோல் அனைத்து இளைஞர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு என்பது இயலாத காரியம், அதுமட்டுமில்லாமல் அரசு வேலைவாய்ப்புகளில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் புகுந்து கொள்கிறார்கள். அதேபோல் தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப் படுகிறது,.

இதனை அனைத்தும் கருத்தில் கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி சட்டத்தை கொண்டு வந்துள்ளார், இதன்படி ஆந்திராவில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் அங்குள்ள இளைஞர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இதன் மூலம் நாட்டிலேயே 75 சதவீத இட ஒதுக்கீடு தனியார் துறையில் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற இருக்கிறது.

இதற்குமுன் மத்திய பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புக்காக 70 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை அந்த மாநில முதல்வர் கொண்டு வந்தார், ஆனால் தற்போது ஆந்திராவில் மேலும் ஒரு படி மேலே சென்று 25% இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது.