ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித்தா.? உண்மையை புட்டு புட்டு வைத்த முக்கிய பிரபலம்.!

0
jeans
jeans

அஜித் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் இவர் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகையில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குனர் வினோத் அறிவித்துள்ளார் அதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் அஜித் தவறவிட்ட திரைப்படங்களைப் பற்றி பலமுறை நாம் பார்த்திருப்போம் அந்த வகையில் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு பதிலாக முதன்முதலில் அஜித்திடம் கால் சீட் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாது என்று கூறியதால்தான் பிரசாந்த் இந்த திரைப்படத்தில் தேர்வு செய்யப்பட்டார் எனவும் அப்பொழுது தகவல் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா பிரபலம் சித்தாரா லக்ஷ்மனன் முதன்முறையாக பேசி உள்ளார் அவர் கூறியது தான் ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அவர் கூறியதாவது ஐஸ்வர்யா ராய் அஜித்தை வேண்டாம் என்று கூறியதும் அதனால்தான் அஜித்திற்கு பதிலாக அப்பாஸிடம் நடிக்க கேட்கப்பட்டது என்பதும் உண்மை இல்லை என கூறி ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அப்பொழுதைய காலகட்டத்தில் ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகிய நேரத்தில் அஜித் அஜித் இருந்ததால் ஐஸ்வர்யா ராய் முடியாது என மறுத்ததாக கூறப்பட்டது முற்றிலும் வதந்தி எனவும் தற்பொழுது இவர் கூறியுள்ளார்.

அஜித்தின் துணிவு திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தான் தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தின் OTT  உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது. பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் மோதும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.