சொத்துக்காக இளம்பெண்ணை..? உறவினர்கள் அட்டூழியம்..? ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.!

0

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா வசித்து வருகிறார்கள், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது, இவர்கள் குடும்பத்திற்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது அதனால் பெரிய பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள், மேலும் மிக வேகமாக விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.