பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி – அதிர்ச்சியில் தமிழ் சினிமா.!

0
jeyam-ravi-
jeyam-ravi-

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் நடிக்கும் பொறுமை காத்து நல்ல கதைகளை தேர்வு செய்து மிகப் பெரிய வெற்றி படங்களை பதிவு செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகினாலும்..

இதுவரை கம்மியான திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும்..

அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி செம்ம மாஸாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஜெயம் ரவி கையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம், இறைவன், சைரன், அகிலன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் தற்போது ஜெயம் ரவி தனது சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடிப்பதற்கு தனது சம்பளத்தை தற்பொழுது அதிகப்படுத்தி உள்ளார்.

ஆம் ஒரு விளம்பர படத்தில் நடிக்க தற்பொழுது ஜெயம் ரவி 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.  இதை அறிந்த கோலிவுட் வட்டாரம். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் ஜெயம் ரவி சம்பளம் உயர்ந்து இருக்க காரணம் என கூறுகின்றனர். இந்த தகவல் இணையதள பக்கத்தில் பதறப்பட்டு வைரலாகி வருகிறது.