தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி.! ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? வெளியான தகவல்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பின் ஆக்ஷன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் ஜெயம் ரவி.  அதனாலேயே அவர் அதிக பெண் மற்றும் ஆண் ரசிகர்களை கவர நடிகர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார்.

எப்பொழுதும் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை சற்று மாற்றியமைத்து நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. கடைசியாக நித்யா அகர்வாலுடன் இணைந்து பூமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தை தொடர்ந்து இவர் 2021 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னின் செல்வன் முதல் பாகத்தில் நடித்து வருகிறார் இதற்காக உடல் எடையை சற்று ஏற்றி கட்டுகோப்பாக வைத்து வேற மாதிரி நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி.

திரைப்படம் நிச்சயம் ஜெயம் ரவிக்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தை அமையும் மேலும் நிறைய பட வாய்ப்புகளை அல்ல வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக டாப் நடிகர், நடிகைகள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்லி வருகிறோம்.

அதுபோல தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி தற்போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் நடிகர் ஜெயம்ரவி ஒரு படத்துக்கு 8 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment