இயக்குனர் மறைந்த பின்பும் மாசான திரைப்படத்தை உதவி இயக்குனரை வைத்து முடித்த ஜெயம் ரவி.!

0

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி இவரும் பல தோல்வி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர்தான் இருப்பினும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் தற்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருவதால் இவரும் ஒரு சில திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பொழுது நல்ல வரவேற்பை பெற்றாலும் பல திரைப்படங்கள் இவருக்கு தோல்வியைத் தழுவி தந்தது விடாமுயற்சியினால் எப்படியோ ஒரு வழியா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார் இந்நிலையில் இவரை பற்றி தான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதில் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் ஒன்று தான் தாம் தூம் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தை ஜீவா என்ற இயக்குனர் இயக்கி வந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்ய நாட்டில் நடந்து வந்தபோது திடீரென அவர் ஒரு சில காரணங்கள் குறித்து மறைந்து விட்டதாகவும் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மணிகண்டனை வைத்து மொத்த திரைப்படத்தையும் முடித்துவிட்டதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது ஜீவாதான் 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே  போன்ற திரைப்படங்களை இயக்கியவராம்.

jeyam ravi2
jeyam ravi2

மேலும் இந்த தகவலை அறிந்த ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவி ஒரு திறமை சாலியான நடிகர் இயக்குனர் இல்லையென்றாலும் உதவி இயக்குனரை வைத்து எப்படியோ அந்த திரைப்படத்தை முடித்து விட்டார் என கூறி வருகிறார்கள்.