சைக்கோ கொலை வெறியனாக ஜெயம் ரவி மிரட்டி இருக்கும் ‘இறைவன்’ பட டிரைலர் இதோ..

iraivan
iraivan

Jayam Ravi: பொன்னியின் செல்வன் வெற்றினைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இறைவன் படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.

இறைவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் நிலையில் சைக்கோ த்ரில்லர் கதை அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இறைவன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹரிகே வேதந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமீபத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகி வருவதனால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் இறைவன் படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு வெளியிட அதில் கொடூர கொலைகள் செய்யும் சைக்கோ கொலைவெறியனாக தேடும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ளார். சற்று முன்பு வெளியான டிரைலரை பார்த்து விட்டு ரசிகர்கள் ராட்சசன் படம் போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.

டிரைலர் உடன் சேர்த்து புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே பிரபாஸின் சலார் படம் இந்த தேதியில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது பிறகு ரிலீஸ் தேதி தள்ளி போனதால் இந்த தேதியை லாக் செய்து ரிலீஸ் ஆக உள்ளது இறைவன்.