Ithaya thirudan movie actress Kamna photos:இந்திய நடிகையாக வலம் வந்தவர் காம்னா. இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார், தன்னுடைய முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழில் இவர் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு இதய திருடன் என்ற திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து இருந்தார், இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் இதயத்திருடன் தான், இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

இந்த நிலையில் இவர் தன்னுடைய முதல் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன் பின்பு 2009 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின் 2011 ஆம் ஆண்டு காசேதான் கடவுளடா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் இதய திருடன் திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி இருப்பது என வாய் பிறக்கிறார்கள்.

