ஜெயம் ரவி-கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் ஜெயம் ரவி இவருடைய நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இந்த திரைப்படத்தினை மணிரத்தினம் இயக்க இன்னும் சில நாட்களில் பொன்னியின் செல்வன் ஒன்று திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இவரை தொடர்பு விக்ரம், கார்த்திக், திரிஷா,பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். அதாவது ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இப்படிப்பட்ட நிலையில் மேலும் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக சற்று முன்பு தகவல் வெளியாகி உள்ளது.

jayam-ravi
jayam-ravi

தமிழ் திரை உலகில் கலக்கி வரும் ஜெயம் ரவி தன்னுடைய 36-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு சைரன் என டைட்டில் வைத்துள்ளார்கள் மேலும் கீழ அறிமுகம் இயக்குனர் திரைப்படத்தினை இயக்க இருக்கிறார் மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க செல்வராஜ் ஒளிப்பதிவில் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தினை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியாகி உள்ளது.

மேலும் விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் பிரபல நடிகை அனுபமா ரமேஷ்வரன் தற்பொழுது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment