தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது ஆரம்பத்திய திரைப்படங்கள் சூப்பராக வெற்றியை ருசித்தாலும் அண்மைக்காலமாக இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவின குறிப்பாக பூமி திரைப்படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது.
அதிலிருந்து மீள சிறந்த இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வகையில் ஜெயம் ரவி கையில் பொன்னியின் செல்வன், இறைவன், அகிலன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் இருக்கின்றன. இந்த படங்களை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஜெயம் ரவி.
இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒருமுறை நயன்தாரா ஜெயம் ரவி இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது நயன்தாரா ஜெயம் ரவி இணையும் படத்தை இயக்குனர் அஹமத் இயக்க உள்ளார்.

இந்த புதிய படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என தெரிய வருகிறது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி வெளிப்படையாக சில விஷயங்களை கூறி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ளது என தெரிய உள்ளது.
மேலும் இதற்கான அறிவிப்பை படக்குழு வெகு விரைவிலேயே வெளியிடும் என தெரிய வருகிறது முதல் முறையாக திரில்லர் களத்தில் ஜெயம் ரவி நடிப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.