வெளியானது ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி திரைப்படத்தை கொடுத்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் 2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அடைந்தார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தாஸ், மழை, இதயத்திருடன் உனக்கும் எனக்கும் தீபாவளி வெள்ளித்திரை சந்தோஷ் சுப்ரமணியன்,  பேராண்மை, தில்லாலங்கடி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார் ஜெயம் ரவி.

இந்த நிலையில் மீண்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி அகிலன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் மேலும் இறைவன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்  ஜெயம் ரவி.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் இறைவன் திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார். படத்தை அகமது என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் படத்தை சுதன் சுந்தரம், ஜி ஜெயராமன், தயாரித்துள்ளார் ஜெயம் ரவி கேரியரில் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

iraivan
iraivan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment