100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஜெயம் ரவி.! சூர்யாவிற்கு டஃப் கொடுப்பாரோ..

0
jeyam-ravi
jeyam-ravi

சமீப காலங்களாக தொடர்ந்து பான் இந்திய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் சினிமாவில் இருந்து வரும் பல நடிகர்களும் பான் இந்திய படங்களில் சர்வ சாதாரணமாக நடித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் இயக்குனர்களும் அந்த நடிகர்களை வைத்து பான் இந்திய படம் உருவாக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்பொழுது பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு டைட்டில் வைக்காமல் இருந்து வரும் நிலையில் 3d அனிமேஷனில் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூர்யாவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு பிரபல நடிகர் ஒருவர் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து இறைவன், அகிலன் போன்ற பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படங்களையும் நடித்து கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வேல் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் ஜெயம் ரவியை வைத்து 100 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான படத்தினை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சூரியா 42வது படத்தினை போல் பத்து மொழிகளில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தினை தொடர்ந்த அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இதற்கு மேல் தமிழ் சினிமாவில் அவருடைய மார்க்கெட் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.