வசூலில் கிங் என நிரூபித்த ஜெயம் ரவி.! தமிழ் நாட்டில் மட்டும் இவ்வளவு வசூல்.!

0
comali
comali

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி.

ஜெயம் ரவி 16 ஆண்டுகளாக கோமாவில் இருப்பார் இதற்கு இடையில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக பேசியுள்ள திரைப்படம் கோமாளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 42 கோடி வரை வசூல் எடுத்துள்ளது. இது ஜெயம்ரவியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் என கருதப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் 90களில் பிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கதைகளும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும், அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர் கூட்டம் வந்தார்கள்.

விசுவாசம் படத்திற்கு பிறகு தமிழில் மாபெரும் வெற்றி என கோமாளி திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள், இந்த திரைப்படத்தை பெற்ற தியேட்டர்காரர்களுக்கு ரூபாய் 10 கோடி வரை லாபம் வந்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.