ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஜெயம் ரவியின் 25வது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி இவர் தனது நடிப்பால் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியேறிய கோமாளி திரைப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் 2019-ல் அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் என்றும் கூறலாம், இந்த நிலையில் ஜெயம் ரவி தனது 25வது படமான பூமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லக்ஷ்மன் இயக்கி வருகிறார். விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் மேலும் காமெடி நடிகர் சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

விவசாயத்தை மையப்படுத்தி எடுத்த உள்ளதால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version