கடலுக்கு நடுவில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி.! வெளியான அகிலன் பட மேகிங் வீடியோ.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக கொடுத்துள்ளறார்.ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2018 ல் வெளியான பூலோகம் திரைப்படத்தின் இயக்குனரான கிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமிபத்தில் தான் வெளியானது.

மேலும் அகிலன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயம் ரவி கடற்படை அதிகாரியாக காணப்படுகிறார். மற்றொரு ஜெயம் ரவி லோக்கல் ஆளாக இருந்து வருகிறார்.

இதிலிருந்து அகிலன் திரைப்படத்தில்  ஜெயம் ரவி  இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்று தெரிய வருகிறது. மேலும் அகிலன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் படத்தின் டீசரை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அப்டேட்டை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தண்ணியா ராமச்சந்திரன் ஆகியோர்  இத்திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment