ஜெயம் ரவியின் ஜெயம் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

jayam
jayam

2003 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, சதா, சுமன் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் ஜெயம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஜெயம் ரவி அவர்கள் வலம் வருகிறார். அதேபோல் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தான் ஜெயம் ரவி அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படம் வெற்றி பெற்றதால் அந்த திரைப்படத்தின் பெயரை தனது பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் ஜெயம் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில்  இயக்குனர் மோகன் ராஜா அவர்களும் இடம் பெற்றுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ஜெயம்ரவி படப்பிடிப்பில் கமல்ஹாசன் என்ன செய்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி அவர்கள் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேபோல் கமலஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்றுள்ளார் அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதோ ஜெயம் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

jayam
jayam