தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றியை ருசித்த ஜெயம் ரவி.! ஜெயம் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? இத்தனை கோடியா

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 20 வருடம் ஆகிவிட்டன இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் தான் ஜெயம் இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகியது.

ஜெயம் திரைப்படம் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியானது இந்த திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழ் ஜெயம் என்று வெளியிடப்பட்டது சினிமாவில் பிரபல எடிட்டராக வலம் வலம் வந்து தயாரிப்பாளராக இருந்த எடிட்டர் மோகனின் திரு மகன்கள் ஆன ராஜா மற்றும் ரவி இந்த திரைப்படத்தில் வாரிசு பிரபலங்களாக அடி எடுத்து வைத்தார்கள்.

ராஜா மோகன் இந்த திரைப்படத்தை இயக்கிய பொழுது ரவி இந்த திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஹீரோயினாக சதா நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கோபி, பிரகதி, நிரகல் ரவி, நளினி செந்தில் சுமன், செந்தில், ரமேஷ் கண்ணா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் ஆஸ்கார் விருது வென்ற மரகதமணி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சதாவிற்கு ஒரு காலகட்டத்தில் ஜெயம் ரவி மீது காதல் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் சிறு வயதில் கோபிசந்திக்கும் சதாவுக்கும் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என பெற்றோர்கள் முடிவு செய்து வைத்திருந்தார்கள் ஆனால் சதாவை சிறுவயதில் இருந்து பார்க்காமல் இருந்த கோபி பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதால் சதாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

ஜெயம் ரவியை காதலிக்கும் சதாவின் காதல் நிறைவேறியதா கோபி சந்தின் ஆசை நிறைவேறியதா என்பதை இந்த திரைப்படத்தின் மீதி கதை ஜெயம் ரவி கோபி சந்திடம் அடி வாங்கும் ஒவ்வொரு காட்சியும் மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தது இன்று வரையிலும் இந்த பாடலை ரசிகர்கள் விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயம் திரைப்படம் ரவிக்கு மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சூப்பராக நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார் ஜெயம் ரவி இதனை தொடர்ந்து ஜெயம் திரைப்படம் உலக அளவில் 25 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை ஈட்டியது.

ஜெயம் திரைப்படம் முதல் வாரத்தில் பெரிய அளவு திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் வரவில்லை ஆனால் ஊடகங்களையும் வெளியான விமர்சனங்களாலும் படத்தைப் பார்த்த மக்கள் பாசிடிவ் ஆன விமர்சனங்கள் கொடுத்ததாலும் அடுத்த அடுத்த வாரங்களில் கூட்டம் அலைமோதியது.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் ஜெயம் ரவியை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment