கடந்த 2002 ஆம் ஆண்டு தேஜா இயக்கத்தில் நிதின் கோபி சாந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியாகிய திரைப்படம் ஜெயம். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சதா நடித்திருந்தார் இதில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் சிறுமி யாமினி ஸ்வேதா இந்த திரைப்படத்தின் ரீமேக் தான் ரவி மோகன் ஜெயம் என்ற திரைப்படத்தை எடுத்தார்.
2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய ஜெயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யாமினி ஸ்வேதா. இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை கிடைத்தது.
ஜெயம் திரைப்படத்தில் பயத்தில் பின்னோக்கி கடிதம் எழுதும் பழக்கம் கொண்ட குழந்தை நட்சத்திரமாக அவர் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. அந்த திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விரதையும் அவர் பெற்றார். ஜெயம் திரைப்படத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.
ஜெயம் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதேபோல் பத்தாவது படிக்கும் பொழுது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் படிப்பு கெட்டுவிடும் அது சரிப்பட்டு வராது என சினிமாவை நிராகரித்தார்.
படிப்பை முடித்துவிட்டு யாமினி ஸ்வேதா திருமணம் செய்து கொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்பொழுது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் படங்களிலிருந்து விலகினாலும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

