தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியலாக எடுக்க இருக்கிறார் கௌதம் மேனன், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு 18 முதல் 30 வயதான கதாபாத்திரத்தை நடிகை அஞ்சனாவும் அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் இருக்கிறது, இந்த திரைப்படத்தை கௌதம் மேனன்தான் இயக்குகிறார், கௌதம் மேனன் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவரின் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா இன்னும் திரைக்கு வரவில்லை இதனால் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த குயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
