பொன்னம்பலத்தை வீட்டிற்கு அழைத்த ஜெயலலிதா.. கெத்து காட்டி 100 முறைக்கு மேல் சென்ற கதை.!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பலருடைய மனதையும் கவர்ந்தவர் தான் பொன்னம்பலம் ஸ்டண்ட் மேனாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் சின்ன சின்ன சண்டை காட்சிகளிலும் டூப் போடுவது, நடிப்பது என்று தனது கேரியரை தொடங்கிய இவர் அதன் பிறகு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். இவருடைய நடிப்பு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் அப்பொழுது இருந்த ஸ்டாண்ட் மேன்கள் 5000, 10000 வேணும் சம்பளம் வாங்கிய நிலையில் பொன்னம்பலம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாராம் இவ்வாறு இதன் மூலம் ரஜினியின் மிக நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து விஜய் முதல் படத்தில் நடிக்கும் பொழுது பொன்னம்பலம் பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் பொன்னம்பலம் ஜெயலலிதாவுடன் நல்ல பழக்கத்தில் இருந்து வந்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயலலிதா அவர்கள் அரசியலுக்கு சென்ற பொழுது முதலமைச்சரான பிறகு பொன்னம்பலத்தை அழைத்துள்ளார். பொன்னம்பலத்திற்கு அரசியல் ரீதியாக ஏதாவது பதவி வேண்டுமா என்று ஜெயலலிதா கேட்க அதற்கு பொன்னம்பலம் எனக்கு உங்களிடம் பதவி எல்லாம் வேண்டாம் நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை வெளியில் காக்க வைக்காமல் உடனே உள்ள விட வேண்டும் நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னை உள்ளே விட வேண்டும் அது மட்டும் தான் எனக்கு வேண்டும் என பொன்னம்பலம் கேட்டுக் கொண்டாராம்.

பொதுவாக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் ஜெயலலிதாவின் அனுமதி கேட்ட பிறகுதான் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்களாம் அவர்கள் அனுமதி பெறும் வரை வீட்டு வாசலில் தான் இருக்க வேண்டும். எனவே இதன் காரணமாகத்தான் பொன்னம்பலமும் ஜெயலலிதாவிடம் இதனை கேட்டாராம் பிறகு ஜெயலலிதாவும் அங்கிருந்த ஊழியர்களை அழைத்து பொன்னம்பலம் வந்தால் மட்டும் அவரை நிறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

இவ்வாறு இதன் பிறகு 100 தடவைக்கு மேல் வீட்டிற்கு சென்றிருப்பேன் நான் வரும்பொழுது பொன்னம்பலம் வருகிறார் என ஒருவர் கூற உடனே  கதவையும் திறந்து விடுவார்கள். ஆனால் வேறு பெரிய பதவியில் இருப்பவர்கள் அனைவரும் காத்திருந்துதான் அவர்களை பார்க்க வேண்டும் என பொன்னம்பலம் சமீபத்தில் கூறியுள்ளார்.

Leave a Comment