‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு தம்பி இந்த முன்னணி நடிகரா.? லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

Thalapathy 68: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் லிலோ படத்தில் தனது காட்சிக் காண படப்பிடிப்புகளை சமீபத்தில் விஜய் முடித்துள்ளார்.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க விஜய்யின் 68வது படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விரைவில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஆண்டியின் இறுதியில் துவங்கி வருகின்ற 2020ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபு நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அது குறித்து அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் தளபதி 68 திரைப்படத்தில் மீண்டும் தம்பியாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க இருக்கிறாராம். நடிகர் ஜெய் ஏற்கனவே விஜய்யின் பகவதி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார்.

jai
jai

இவரைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக வெங்கட் பிரபு-விஜய் கூட்டணி இணைந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment