ஜவான் படத்தில் விஜய் சேதுபதி “லுக்” – வைரலாகும் புகைப்படம்

Vijay sethupathy : பாலிவுட் பாஷா ஷாருக்கான் பதான் படத்தின்  வெற்றியை தொடர்ந்து தமிழ் இயக்குனர் அட்லீ உடன் கைகோர்த்து ஜவான் படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது படத்தில் ஷாருக்கான் உடன் கைகோர்த்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி..

மற்றும் யோகி பாபு, சானியா மல்கோத்ரா  பலர் நடித்துள்ளனர். ஒரு சின்ன வேடத்தில் நடிகை தீபிகா படுகோனும் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜவான் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளது அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் தொடர்ந்து ஜவான் படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் வெளிவந்து மிரட்டுகின்றன அண்மையில் படத்தின் டீசர் வெளிவந்து ட்ரெண்டாகிய நிலையில் அடுத்ததாக நயன்தாராவின் லுக்கும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று ஜூலை 24 தேதியை முன்னிட்டு ஜவான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் தோற்றமும் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் There’s no stopping him… Or is there.? Watch out! எனக்கூறி விஜய் சேதுபதியின் லுக்கை வெளியிட்டார் கீழே  ஜவான் படத்தின்  தேதியையும் சொல்லி உள்ளார்.

ஜவான் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ஹிந்தி, தமிழ், தெலுங்கிலும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த  ரசிகர்கள் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இதோ நடிகர் விஜய் சேதுபதியின் ஜவான் பட லுக்கை நீங்களே பாருங்கள்..

Leave a Comment