ஜவான் படத்துக்கு குத்தாட்டம் போட்ட டைரக்டர் மனைவி.!

jawan dhanya balakrishna
jawan dhanya balakrishna

Jawan : நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ‘ஜவான்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில்  நடிகர் ஷாருக்கான் “இரட்டை வேடத்திலும்”  மேலும் இவருடன் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா, விஜய் சேதுபதி,தீபிகா படுகோன், பிரியாமணி மற்றும் சன்யா மல்ஹோத்ரா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி  திரையரங்குகளில்  வெளியிடப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தான் ‘தன்யா பாலகிருஷ்ணன்’. காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 போன்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவி தான் தன்யா பாலகிருஷ்ணன் . இவர் நடிகர் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த “ஏழாம் அறிவு “என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில்  அறிமுகமானார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தில் வெளியான பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். “ஜெயிலர்” பட காவலா பாடலுக்கும் “லியோ” பட நான் ரெடி பாடலுக்கும் தான் ரீல்ஸ் போடுவார்களா? நான் என் தோழி நடித்த ஜவான் பட பாடலுக்கு ரீல்ஸ் போடுகிறேன் பாருங்கள் என்று  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

இந்த வீடியோவில் தன்யா கிருஷ்ணன் வெள்ளை உடையில்  உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்  அந்த பாடலுக்கு நயன்தாரா கூட இப்படி ஆடவில்லை என்று பாராட்டியும் அதே சமயம் கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போடுவதாக பல மோசமான  கமெண்ட்களும் வந்து குவிகிறது.