என்ன ஜெயிக்க எவன்டா இருக்கான் மாஸ் காட்டும் “ஜவான்” – 8 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவவ்வளவு தெரியுமா.?

Jawan Movie 8 day collection  report : பாலிவுட் பாட்ஷா  ஷாருக்கான் பதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடித்தார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா  பிரியாமணி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்தனர்.

படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது படத்தை ரசிகர்களையும் தாண்டி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளே பார்த்தனர் காரணம் அந்த அளவிற்கு இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர் ட்ரைலர் என அனைத்தும் மிரட்டியதால் மிகுந்த எதிர்பார்ப்பில் பார்த்தனர்.

படமும் சும்மா சொல்லக்கூடாது. ஆக்சன் எமோஷனல் காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால்  நல்ல திருத்தியை கொடுத்தது இதனால் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடியது முதல் நாளில் 125 கோடி வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது வெறும் நான்கு நாட்களில் மட்டுமே ஜவான் திரைப்படம் 500 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.

இதனால் முதல் 10 நாளிலேயே 1000 கோடியை ஜவான் தொட்டுவிடும் என பலரும் கருதினர் ஆனால் 6,7  நாட்களில் ஜவான் படத்தின் வசூல் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஜவான் படம் வெளியாகி 8 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் சுமார் 690 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம் வருகின்ற நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் ஜவான் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.