6வது நாள் வசூலில் மண்ணை கவ்விய “ஜவான்”.? சோள முத்தா 1000 கோடி போச்சா.!

Jawan Movie 6 day collection report : இந்த ஆண்டு வெளியான பல டாப் ஹீரோக்கள் படங்கள்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் ரூதர தாண்டவம் ஆடி வருகிறது அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மக்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதனை அடுத்து வெளியான  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உருவான திரைப்படம். இவர்களுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியா மணி, தீபிகா படுகோன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

படம்  முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, எமோஷனல் கலந்த ஒரு படமாக இருந்ததால்  ரசிகர்களையும் தண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 125 கோடியில் வசூல் செய்தது இரண்டாவது நாளில் 110 கோடி மூன்றாவது நாளில் 144 கோடி..

நான்காவது நாளில் 136 கோடி வசூல் செய்தது இதன் மூலம் வெறும் 4 நாட்களில் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அடுத்த அடுத்த நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி வந்த நிலையில் நேற்று வசூலில் மரண அடி வாங்கியது நாம் நேற்று மட்டுமே 40 அல்லது 50 கோடி தான் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் சேர்த்து ஜவான் திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளது.

வசூல் குறைந்து கொண்டே இருப்பதால் ஜவான் 1000 கோடி தொடுவது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. ஆனால் பலருடைய கணிப்பு ஷாருக்கானுக்கு  ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் இருக்கின்றனர் நிச்சயம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என பலரும் அடித்து கூறுகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..

Exit mobile version