சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறாரா அட்லி.? வெளியானது ஷாருக்கானின் ஜவான் முதல் விமர்சனம்.!

jawan review
jawan review

Jawan : செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது ஆக்சன், காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்த கலவையாக சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் அட்லி.

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் இவர் முதன் முதலில் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார் தான் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து இயக்கினார் இவர் என்னாதான் மூன்று திரைப்படங்களை இயக்கினாலும் அந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தது ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களின் தழுவலாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அதேபோல் தமிழில் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு தமிழை தாண்டி வேறு மொழி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அது ஒரு சில இயக்குனர்களுக்கு சாத்தியமாகிறது அந்த வகையில் அட்லி தமிழை தாண்டி பாலிவுட் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோனே, ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது ஜவான் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது இந்த நிலையில் படம் சரியான ஆக்சன், காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்த கலவையாக இருப்பதாகவும் சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்கும் படி அட்லி இயக்கியுள்ளார் எனவும் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.