ஜவான் படப்பிடிப்பு முடிவு.? ஆஸ்தான நடிகருடன் போட்டி போட துடிக்கும் அட்லி…

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சங்கருடன் பணியாற்றிய பல உதவி இயக்குனர்கள் தற்போது தடம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர் அட்லியோ தனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான மெர்சல், பிகில், தெறி, ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த மூன்று திரைப்படத்தையும் நடிகர் விஜயை வைத்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் இந்த மூன்று திரைப்படங்களும் தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி விஜய்க்கு மூன்று திரைப்படங்களை வெற்றி படமாக கொடுத்ததால் ஆஸ்தான இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் அட்லி. இதனை தொடர்ந்து தமிழை தாண்டி தற்போது  பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பது தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்து இருந்தது. அந்த வகையில் ஜவான் திரைப்படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து முடியும் வரை காலதாமதம் ஆகிக்கொண்டே வந்ததால் நடிகர் ஷாருக்கான் அவர்கள் அட்லீயை கண்டித்திருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அட்லிக்கும் ஷாருக்கானுக்கும் இடையே சில மனச்சலப்புகள் வந்ததாக சில தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடோஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த போஸ்ட் ப்ரோடோக்ஷன் பணிகள் முடிய தாமதமானால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிய தாமதமானால் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அட்லீ ஒரு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அதே தேதியில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதன்முறையாக அட்லீ அவர்கள் தன்னுடைய ஆஸ்தான நடிகருடன் மோத போகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment