வருங்கால கணவர் யார் என்பது பற்றி மனம் திறந்த சின்னத்திரை நடிகை ஜாக்குலின்.!! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ மூலம் அங்காரக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.

இதன் மூலம் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது பல நடிகைகள் ரசிகர்களுடன் லைவ்வில் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஜாக்குலின் ரசிகர்களுடன் பேசியுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு ஜாக்லின் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன் அழகான நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் அப்படி யாராவது இருந்தால் என்னை உடனே காண்டக்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது அவர் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version