வாய்க் கொழுப்பால் சிக்கி சீரழியும் விஜய் டிவி ஜாக்லின்.! நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இது உனக்கு தேவையா என கலாய்க்கும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் நடிகைகள் நடிகர்கள் என அனைவரும் கொஞ்சம் பிரபலமானதும் வெள்ளித்திரைக்கு கிளம்பி விடுகிறார்கள். அந்த லிஸ்டில் சந்தானம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலங்கள் பலருக்கு வாய்க்கொழுப்பு இருப்பது தெரிந்ததுதான், மேலும் இந்த உலகத்தையே நாம்தான் கட்டி காக்கிறோம் என அவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது. அந்தவகையில் தொகுப்பாளினியாக பணியாற்றும் ஜாக்குலின் சினிமாவில் நடித்த பிறகு சும்மா இருப்பாரா என்ன.

ஜாக்குலின் சமீபகாலமாக ஓவர் பந்தா காட்டி வருகிறார் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இந்த சீரியலில் ஆரம்ப காலத்தில் ஜாக்லின் திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தினார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது அதை பார்த்த பலரும் திருமணம் ஆனது போல் போட்டோ ஷூட் நடத்துகிறார்களே உங்களுக்கு மார்க்கெட் அடிவாங்காத என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு வராது என கூலாக சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்படாது.

ஆனால் வாய்க் கொழுப்பால் 35 வயதில் ஹீரோயின்கள் பள்ளி சீருடையில் நடித்து கொண்டு இருக்கிறார்கள் நான் திருமணக்கோலத்தில் நடிக்கக் கூடாதா என வாய்க்கு வந்ததை உளறியுள்ளார்.

நடிகை ஜாக்குலின் த்ரிஷாவை நேரடியாக அசிங்க படுத்தியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஜாக்லின் அவர்களை மரணமாக ஓட்டி வருகிறார்கள்.

Leave a Comment