டேய் எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாது டா.. வெளியானது கார்த்தியின் ஜப்பான் டீசர்.!

japan teaser :  கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜப்பான்” இந்த திரைப்படத்தை ஜிப்சி படத்திற்கு பிறகு ராஜமுருகன் இயக்கி உள்ளார். கார்த்திக்கு இந்த திரைப்படம் 25வது திரைப்படமாக கருதப்படுகிறது. படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் சுனில் இயக்குனர் விஜய் மில்டன் என மிக முக்கிய கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் ரவிவர்மா ஒளிப்பதிவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. வருகின்ற தீபாவளி தினத்தில் ஜப்பான் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த டீசரில் கார்த்தி கொள்ளையடிப்பது போலவும் நான்கு ஸ்டேட்டுகளில் இவரை தேடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

1.24 நிமிடங்கள் இந்த டீசர் ஓடுகிறது இதில் ஜப்பான் என்ற வார்த்தை 9 முறை உச்சரிக்கப்பட்டுள்ளது இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த திரைப்படம் முழுவதும் கார்த்தியை சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் டீசரின் கடைசியில் எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாது டா என வசனம் இடம் பெற்றுள்ளது.

இதோ டீசர்