சீரியலில் கொடிகட்டி பறக்கும் ஜனனியின் தங்கையை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

janani
janani

சினிமாவில் இருக்கும் நடிகைகளை காட்டிலும் சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் ஏனென்றால் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு இல்லத்தரசிகளும் வாண்டுகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஜனனி அசோக் குமார் என்பவர் ஒரு திரைப்பட நடிகை ஆவார்.

இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவன் இவர் முதன்முதலாக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கிய நண்பேண்டா என்ற திரைப்படத்தில் 2015ஆம் ஆண்டு நடித்திருந்தார். தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார்  அதன்பிறகு 2018ஆம் ஆண்டு சமுத்திரகனி அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஏமாளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் சரியான கதாபாத்திரம் அமையாததால் சீரியல் பக்கம் தனது திசையை திருப்பினார் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மாயனின் இரண்டாவது தங்கையாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு மௌனராகம் செம்பருத்தி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். பொதுவாக விஜய் தொலைக்காட்சியில்  நடித்து வரும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுவார்கள் அந்த வகையில் இவரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருவார் அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் அது மட்டுமில்லாமல் தனது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ஜனனியின் ரசிகர்கள் இவர்தான் உங்களுடைய தங்கையா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக் கூறி அவரின் புகைப்படத்தை வருணித்து வருகிறார்கள்.

janani
janani