விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. போட்டிக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியானாலும் கண்டிப்பாக தளபதி படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லாம் டிக்கெட் புக்கிங் ஜோராக நடந்துவருகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் பல கோடிகளை படம் அள்ளியிருப்பதாக திரையரங்கங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படத்தின் ட்ரைலரில் முன்னாள் போலீஸ் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் மரணத்தை தொடர்ந்து அவரது மகளை வளர்த்து எப்படியாவது ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என போராடுகிறார்.
அதற்காக பூஜா ஹெக்டே உதவி செய்வது போல் கதை உள்ளது. அர்ஜுன் ராம்பால் உலகத்திலேயே தான் தான் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என பிராஜெக்ட்டை செயல்படுத்த நினைப்பது போல பாபித்தியோள் ஓம் என்னும் ப்ரொஜெக்ட்டை அமல்படுத்த நினைக்க அதை எப்படி விஜய் தடுக்கிறார்.
மமிதா வுக்கு கிளைமாக்ஸ்ஸில் எப்படி வீரம் வருகிறது, என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்கள் இருக்கின்றன விஜய் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமையும் என டிரைலர் பார்த்த அனைவருக்கும் தெரியும்.