ஜனநாயகன் தள்ளிப் போனதால பராசக்தி மேல கோபத்தை காட்டிடாதீங்க.. அலப்பறை பண்ணும் நெட்டிசன்கள்

ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் படம் வெளியாகாது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இதற்கு இடையில் விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இணையதளத்தில் தங்களுடைய அலப்பறையை ஆரம்பித்து விட்டனர். ஜனநாயகன் வெளியாகாது என ஒரு தரப்பு கிண்டல் அடித்து மீம்ஸ் போட்டு வருகிறது.

அதேபோல் பராசக்தி கைல சிக்கட்டும் இருக்கு என இன்னொரு தரப்பு வன்மத்தை காட்ட தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படி சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் உலா வந்து கொண்டிருக்கிறது.