பாட்ஷா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஜனகராஜ் தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

தமிழ் தமிழ்சினிமாவில் காமெடியன்கள் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளனர்.காமெடியன்கள் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவார்கள் கவுண்டமணி,வடிவேலு,செந்தில் போன்றவர்கள்  தான் என்பது  அனைவரும் அறிந்ததே இது போன்ற பெரிய காமெடி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது தனித்துவமான பேச்சின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் ஜனகராஜ்.

வாயை கோணலாக வைத்து ஒரு கண்ணை மூடியும் மற்றொரு கண்ணை சிமிட்டியபடி பேசி ரசிகர்கள் மற்றும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் பாரதிராஜா இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இவர் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்து தன்னை பிரபல படுத்திக்கொண்டார் இருப்பினும் இவர் 70 காலகட்டங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் 80 காலகட்டங்களில் இவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது எண்பதுகளில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார்.

அந்த வகையில் இவர் சிந்து பைரவி, கோகிலா, ராஜாதிராஜா, அபூர்வ சகோதரர்கள், அக்னி நட்சத்திரம், புது புது அர்தங்கள் போன்ற வெற்றி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வளரத் தொடங்கினார் இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் காமெடியனாக மட்டும் அல்லாமல் குணசித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் தற்பொழுது  வரும் படங்களில் அவ்வளவாக நடிக்காமால் இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொண்டுதான் இருந்து வருகிறார் ஜனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரஜினியுடன் இணைந்து 1995 ஆம் ஆண்டு பாட்ஷா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் ஜனகராஜ் இப்படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அத்தகைய புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் சினிமா உலகில் பயணித்தால் சிறப்பாக இருக்குமென கூறிவருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

janaga-raj

Leave a Comment

Exit mobile version