தளபதி விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் அதனால் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் இருக்கும் என பலரும் கூறப்பட்ட நிலையில் தளபதி விஜய் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்காக எனக் கூறி இதுதான் கடைசி படம் எனக் கூறியுள்ளார். ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
மலேசியாவே டிராபிக்கில் ஸ்தம்பித்தது இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் அட்லி ஹெச் வினோத் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மேடையில் பேசினார்கள் இதில் எச் வினோத் பேசியது ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது அதற்கு காரணம் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கி பேசியதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
வினோத் பேசுகையில் ஜனநாயகன் முன்ன பின்ன இருக்குற மாதிரி இருக்கே உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்கினர உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது. ஐயா இது தளபதி படம் உங்க மைண்ட்ல என்ன இருந்தாலும் அத அப்படியே கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் போட்டு எல்லாத்தையும் அழிச்சிட்டுங்க இது 100% என்டர்டைன்மென்ட் ஆன படத்தை பார்க்க வாங்க இந்த படத்துல அழும்காச்சு எல்லாம் கிடையாது படத்தோட முடிவுல நம்பிக்கை மட்டும் தான் இருக்கும் ஏன்னா தளபதிக்கு இது முடிவு கிடையாது இதுதான் ஆரம்பம் என எச் வினோத் பேசியுள்ளார்.
இவ்வாறு பேசியது ரசிகர்கள் பலரும் எச் வினோத் பராசக்தியுடன் ஒப்பிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் மோதி வருகிறார்கள்.