என் மீது கோபமா.?. ஒரு படம் நம்முடைய நட்பை தீர்மானிக்காது தளபதி சொன்ன பதில்.. இன்னொரு படம் பண்ண ஆசை..

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தன்னுடைய கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை கே வி என் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் அரசு உத்தரவுபடி எந்த ஒரு அரசியலும் பேசக்கூடாது என கூறியிருந்தார்கள் இந்த நிலையில் பிரமாண்டமான முறையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது, இதில் சினிமாவில் பிரபலமான இயக்குனர், நடிகர் என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் பேசிய பொழுது ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துக்கள் எனவும் உங்களுடைய பெரிய பெரிய ஆசைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் எனவும் கூறியிருந்தார். அதேபோல் லியோ 2 திரைப்படத்திற்கான தேதி எப்பொழுது என கேட்பேன் என கூறியிருந்தார் அதற்கு பிளடி ஸ்வீட் என விஜய் பதில் அளித்து இருப்பார்.

அடுத்ததாக நெல்சன் பேசுகையில் அர்ஜென்டினா அணியின் இறுதி உலகக் கோப்பை போட்டி போல் இந்த மைதானம் காட்சியளிக்கிறது. விஜயை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது ஆனால் பீஸ்ட் படத்தை இயக்கி பெரிய தவறு செய்து விட்டேன். பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது நான் நன்றாக இயக்குகிறேனா  எனத் தொடர்ந்து விஜய் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது விஜையிடம் என் மீது கோபமா என கேட்டேன் அதற்கு பதில் அளித்த அவர் இந்த ஒரு படம் நம்முடைய நட்பை தீர்மானிக்காது என பதிலளித்திருந்தார் விஜய் எனக்கு ஒரு அண்ணனை போன்றவர் என அந்த மேடையில் கூறியிருந்தார்.