லியோ 2 எப்பொழுது! ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கேட்ட தரமான கேள்வி.! விஜயின் பதில் என்ன தெரியுமா.?

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இதனால் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் இருக்கும் என கூறப்படுகிறது ஆகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே மமீதா ,ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

பொங்கல் தினத்தை குறிவைத்து ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றுள்ளது இதில் அரசியல் பேசக்கூடாது என மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது இதில் இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜனநாயகன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள ஒவ்வொரிடமும் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா அப்படியே உங்களுடைய பெரிய பெரிய ஆசைகள் நிறைவேற வெற்றி பெற வாழ்த்துக்கள் இதுதான் உங்கள் கடைசி படம் என நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது.

என்னுடைய சினிமா கேரியரில் மாஸ்டர் லியோ இரண்டுமே முக்கியமான திரைப்படங்கள் நான் என்னுடைய லியோவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் லியோ 2 திரைப்படத்திற்கான தேதி எப்பொழுது என்று தான் கேட்பேன் அதற்கு அவர் பிளடி ஸ்வீட் என பதில் அளித்து இருப்பார் இவ்வாறு லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேசினார்.