அப்படியே மாளவிகா மோகனன் போல இருக்கீங்க.! ஐஸ் வைத்ததை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட ஜல்லிக்கட்டு ஜூலி.!

தமிழ் ரசிகர்களிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர் ஜூலி. அதன் பிறகு இவருக்கு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது அதாவது விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு பிடித்த சீசன் என்னமோ முதல் சீசன் தான். வீர தமிழச்சி என ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பெயரெடுத்த ஜூலி பிக்பாஸில் கலந்து கொண்டது தனது நல்ல பெயரை மாற்றிக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியை பல ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள் அதனால் ஜூலியை சமீபத்தில் வீடியோ மூலம் நான் என்ன செய்தேன், எதற்கு இவ்வாறு என்னை வருகிறீர்கள் என ஒரு வீடியோ மூலம் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

julie
julie

அந்த வீடியோவில் நான் என்ன தப்பு செய்து விட்டேன் நான் மற்றவர்களின் சொத்தை பிடுங்கிக் கொண்டேனா இல்லை பணத்தை அபகரித்தேனா நான் பொய் தானே சொன்னேன் இந்த உலகத்தில் பலரும் பொய் சொல்வார்கள் யாராவது பொய் சொல்லாதவர்கள் இருந்தால் மட்டும் என்னை திட்டடும். என அந்த வீடியோ மூலம் கூறினார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ஜூலி இதில் சென்றாயன் அவர்களுடன் நடனம் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஜூலி உருக்கமாக பேசினார் அவர் பேசியதாவது மெரினா பீச்சில் நான் ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொழுது நிறைய பேர் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள் ஆனால் தற்போது மெரினா பீச் பக்கம் போனாலே என் மூஞ்சில காரி துப்புவார்கள் அந்த அளவிற்கு நான் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்தநிலையில் ஜூலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் ரசிகர்கள் என்னதான் அவரை கேவலப்படுத்தினாலும் தனது வேலையை தொடர்ந்து செய்து வருவார். இந்த நிலையில்  ஜூலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனன் போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள். உடனே ஜூலி மாளவிகா மோகனுடன் ஒப்பீட்டு மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

julie
julie

Leave a Comment