10 வருடத்தில் 100 படம்… கமலின் திரை வாழ்க்கையில் உதவிய நடிகர்.! பலருக்கும் தெரியாத தகவல்.

Kamal haasan : இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனுக்கு திரை பயணத்தில் ஒரு காலகட்டத்தில் உதவியது ஜெய்சங்கர் தான் தெரியுமா.?

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசனும் ஒருவர், இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் திகழ்ந்து வருகிறார் அதேபோல் தமிழ் சினிமாவை உலக சினிமா லெவலுக்கு கொண்டு சேர்த்தவர்களில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன் தற்கொலை குறித்தும் பேசினார், அப்பொழுது நானும் இளம் வயதில் சினிமாவிற்கு வந்த புதிதில் பட வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை குறித்து யோசித்துள்ளேன் என்று பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார் அட இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் கமலஹாசன் இப்படி நினைத்தாரா என பலரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

என்னதான் சிறுவயதில் முன்னணி நடிகர்களுடன் கமலஹாசன் நடித்து வந்தாலும் இளமை பருவத்தில் முதன் முதலில் நடன இயக்குனராக தான் சினிமாவிற்கு அறிமுகமானார் அவருக்கு அப்பொழுது பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் இந்த சூழ்நிலையில் இருந்த அவருடைய சினிமா பாதையை உயரத்திற்கு கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு பிரபல நடிகருக்கு இருக்கிறது.

அவர் வேறு யாரும் கிடையாது ஜெய்சங்கர் தான் 1965 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஜெய்சங்கர் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் புகழின் உச்சத்தில் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தார் தனக்கென்று ஒரு ஸ்டைலை அமைத்துக் கொண்டு சினிமாவில் பத்து வருடத்தில் 100 திரைப்படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தார். அது மட்டும் இல்லாமல் சுமார் 320 திரைப்படங்களுக்கு மேல் ஜெய்சங்கர் நடித்துள்ளார். ஒரே வருடத்தில் 35 திரைப்படங்கள் வரை மிகவும் பிசியாக நடித்து வந்த ஜெய்சங்கர் அப்பொழுது கூட பொதுமக்களை அரவணைப்பதில் கூறிக்கோளாக இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் ஆதரவற்றவர்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். பல நடிகர்கள் அன்றைய காலகட்டத்தில் கொடை வள்ளல்கள் என இவரை புகழ்வதுண்டு. தன்னுடைய சினிமா பயணத்தை ஜெய்சங்கர் தொடங்கிய பொழுது கமலஹாசனை தன்னுடைய திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் அவருடைய நடிப்பு பாதையில் முன்னேறுவதற்காக பல உதவிகளை ஜெய்சங்கர் செய்துள்ளார் கமலஹாசன் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக மாறிய பொழுது கூட ஜெய்சங்கர் கமலஹாசன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்