நான் முதலிலிருந்து ஃபாலோ பண்ணிட்டு வரேன் அவர் எனக்கு பாபா! ஜெயிலர் பட வில்லன் பேச்சு

jailer villan vinayakan speech :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் எங்கும் 4000- த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க அப்பா மகன் பாசத்தை எடுத்து உரைக்கும் படமாக இருந்தாலும்..

ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, யோக பாபுவின் கலக்கல் காமெடி, விநாயகத்தின் ரவுடிசம், சிவராஜ்குமார் /மோகன்லால் ஆகியவர்களின் மாஸ் என்ட்ரி என அனைத்தும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியேன்ஸ் ஜெயிலர் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

அதனால் மூளை முடுகெங்கும் வசூல் வேட்டையாடியது முதல் நாள் மட்டுமே 90 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் குறையவே இல்லை. ஜெயிலர் படத்தை எதிர்த்து தற்போது பல படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இன்னமும் சரி, பல திரையரங்குகளில் ஜெயிலர் மாஸ் காட்டிக் கொண்டுதான் வருகிறது.

இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. OTT தளத்திலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் டெய்லர் படத்தின் வில்லன் விநாயகன் பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

ரஜினி வெறும் நடிகர் மட்டுமல்ல அவர் எனக்கு கடவுள் மாதிரி அவரை தான் நான் முதலில் இருந்து ஃபாலோ பண்ணிக் கொண்டு வருகிறேன் அவர் எனக்கு பாபா என்னுடைய தெய்வம் ரஜினி சார் என விநாயகன் பேசி உள்ள வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.