25 நாட்களை தாண்டிய “ஜெயிலர்” – இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer
Jailer

Jailer : சினிமா உலகில் நடிக்கும் நடிகர் , நடிகைகளுக்கு வெற்றி /  தோல்வி மாறி மாறி வருவது வழக்கம் இதனால் அவர்களுடைய மார்க்கெட் சரிந்தாக அர்ந்தம் இல்லை.. அதை இப்போ புரிய வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றதால் ரஜினியின் மார்க்கெட் சரிந்தது என பலரும் கூறினர்.

உடனே நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார். அவருடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக படத்தின் வசூலும் அதிகரித்தது. இதனால் சந்தோஷம் அடைந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியவர்களுக்கு சொகுசு கார் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் செக் கொடுத்து அசதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் 25 நாட்களைத் தொட்டது நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிலையில் ஜெயிலர் படம் 25 நாட்களை கடந்த நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் 610 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினி  லால் சலாம் அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனருடனும் ரஜினி கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.