கொளுத்துடா வெடிய.. ஜெயிலர் பட வெற்றி ரஜினிக்கு பல்க் அமௌன்ட் கொடுத்த கலாநிதி மாறன்.? வைரலாகும் புகைப்படம்

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இதற்கு முன்பு நெல்சன் திலீப் குமார் விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியவர் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வராததால் ஜெயிலர்  திரைப்படம் எப்படி வரும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

ஆனால் அனைத்து விமர்சனங்களையும் உடைத்தெறியும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி நெல்சன் நிரூபித்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் வசந்த் ரவி, மிரினா யோகி பாபு, விநாயகன், சுனில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீப் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளே தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது அது மட்டும் இல்லாமல் உலக அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வைரலாக தொடங்கியது. தமிழகத்தை தாண்டி அண்டை மாநிலத்தில் தான் 200 கோடி ஜெயிலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதைப்போல் அமெரிக்காவில் முந்தைய கோலிவுட் திரைப்படங்களின் வசூலின் சாதனைகளை முறியடித்துள்ளது என தகவல் வெளியானது.

வெற்றிகரமாக ஜெயிலர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது இந்த நிலையில் 700 கோடியை நெருங்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த திரைப்படத்தின் வெற்றியாள் படத்தை தயாரித்த சன் பிக்சர் நிறுவனம் மிகுந்த குஷியில் இருக்கிறது. ஏற்கனவே சன் பிக்சர் நிறுவனம் நெல்சனுக்கு ஏதோ பரிசு கொடுப்பதாக தகவல் வெளியானது.

jailer win rajini
jailer win rajini

அப்படி இருக்கும் நிலையில் திடீரென தற்பொழுது ரஜினிகாந்தை கலாநிதி மாறன் சந்தித்துள்ளார் ஜெயிலர்  திரைப்படத்தின் வெற்றியால் வரலாறு சாதனையை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு செக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் இது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் நெல்சன் அடுத்த திரைப்படத்தையும் தயாரிக்க சன் பிக்சர் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

jailer win rajini
jailer win rajini

ஜெயிலர் வெற்றிக்கு கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எவ்வளவு செக் கொடுத்தார் என்பது இதுவரை தெரியவில்லை ஆனால் அந்த செக்கில் ரெக்கார்ட் மேக்கர் என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்றுள்ளது என கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நெல்சனை சந்தித்து சன் பிக்ச்சர் நிறுவனம் பிரம்மாண்ட கிப்ட் ஒன்றை கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.